இரட்டை நகரம் என அழைக்கப்படுபவை திருநெல்வேலி, பாளையங்கோட்டை. இவற்றுள் பாளையங்கோட்டையின் அடையாளச் சின்னமாக அமைந்திருப்பது "ஊசி கோபுரம்' என அழைக்கப்படும் "தூய திரித்துவ பேராலயம்'. இந்த ஆலயம் 1826- ம் ஆண்டு முதல் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டது ஆகும். இந்த ஆலயத்தைக் கட்ட அடித்தளமிட்டவர் அப்போதைய குருத்துவ மிஷினெரி ரேணியஸ் அய்யர். இந்த ஆலயம் இருக்கும் இடத்தை இந்து மதத்தை சேர்ந்த செல்வந்தர் வெங்கு முதலியார் வழங்கியுள்ளார். கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கட்டிய சுலோச்சன முதலியார் உள்ளிட்ட பல இந்து செல்வந்தர்களும் இந்த ஆலயம் கட்ட பொருளுதவி செய்துள்ளனர். 1826-ம் ஆண்டு ஜூன் 26-ல் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆலயம் கட்டப்பட்ட புதிதில் இது "புது ஆலயம்' என்று அழைக்கப்பட்டது. ஆலயப் பதிவேட்டில் கையெழுத்திட வந்த அப்போதைய பேராயர் தானியேல் கோரி, இந்த ஆலயத்திற்கு "தூய திரித்துவ ஆலயம் ' என பெயரிட்டார். அந்த பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. பின்னர், இந்த ஆலயம் பல்வேறு கால கட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று பிரமாண்டமான ஆலயமாக காட்சியளிக்கிறது.
விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஊசி வடிவில் 115 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டது. 1850-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த "ஜான் முரே சன்ஸ்' நிறுவனத்தால் செய்யப்பட்ட ஆலய மணியும், கடிகாரமும் கோபுரத்தில் பொருத்தப்பட்டன. இந்த கடிகாரம் தொடர்ந்து 156 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை ஓடிக் கொண்டிக்கிறது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த ஊசி கோபுர ஆலயம் கிறிஸ்தவர்களின் பாரம்பரியத்தை உயர்த்தி நிற்கிறது.
தூய. சவேரியார் ஆலயம்:பாளையங்கோட்டை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பேராலயமாக விளங்குகிறது தூய. சவேரியார் ஆலயம். இந்த ஆலயம் கி.பி. 1838-ம் ஆண்டு வரை சிறு அளவிலான மாதா ஆலயமாக இந்தது.
அதன் பின்னர் கத்தோலிக்க சபையில், பாளையங்கோட்டை பங்கு சேசு சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கி.பி. 1841-ம் ஆண்டுவாக்கில் பழைய ஆலயத்தை இடித்து விட்டு சிறிது கிழக்கே சிலுவை வடிவக் கோயில் கட்டப்பட்டது. அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்வர்களே இருந்தனர். கி.பி.1860-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் தேதி புதிய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ. 9,000 என திட்டமிடப்பட்டது.
இந்த பணம் ஆலயத்தின் வரி, நன்கொடை, நில வருமானம், கத்தோலிக்க படை வீரர்களின் மாத வசூலிப்பு ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டது. இறுதியில் ரூ. 48,000 செலவில் 1959-ல் புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இதுதான் நாம் தற்போது பார்க்கும் தூய. சவேரியார் ஆலயம்.
இந்த பேரலாயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறும்.
பாளையங்கோட்டை தூய. சவேரியார் பேரலாயம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கலங்கரை விளக்கு.
ஆலயம் செல்ல
இவ்விரு ஆலயங்களும் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் சந்திப்பு பஸ் நிலையம், ரயில் நிலையம், புதிய பஸ் நிலையம் என நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் வசதியும், போக்குவரத்து வசதியும் உள்ளது. ரயில் மூலம் வர விரும்புகிறவர்கள், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து வரலாம். பக்தர்கள் தங்குவதற்கு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதியில் விடுதி வசதிகள் உள்ளன.
புதன், 19 ஆகஸ்ட், 2009
தூய திரித்துவ ஆலயம் என அழைக்கப்படும் ஊசி கோபுரம்
பாளையங்கோட்டையில் தூய திரித்துவ ஆலயம் என அழைக்கப்படும் ஊசி கோபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக