வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

வாழ்த்துவோம், வணங்குவோம், சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஜெனோவா புஷ்பம். இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் பெயர் ஜான்சன். ஜெனோவா புஷ்பத்திற்கு சிறுவயதிலேயே வாகனங்களை ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். இதனால் லைட் வெயிட் டிரைவிங் முடித்த இவர் திருமணத்திற்கு பின் ஹெவி வெயிட் டிரைவிங் பயிற்சிக்கு ஐஆர்சி மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

பின்பு நெல்லையில் ஹெவி டிரைவிங் பயி்ற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். கடந்த 2008ம் ஆண்டு சுகாதார துறையில் டிரைவராக இவருக்கு வேலை கிடைத்தது.

இதையடுத்து ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக ஜெனோவா புஷ்பம் பணியாற்றி வருகிறார். உயிர் காக்கும் முக்கிய வாகனமான ஆம்புலன்சில் ஜேனோவா புஷ்பம் டிரைவராக பணியாற்றுவது சவாலுக்குரியதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts with Thumbnails